புத்தகம் : காலநிலை மாற்றம்
ஆசிரியர் : நாகமுத்து பிரதீபராஜா
பதிப்பகம் : சேமமடு பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : புவியியல்
ISBN: 978-955-685-173-1
விலை : 1800 பக்கங்கள் : 254
புத்தகம் : நறுந்தொகை
ஆசிரியர் : ந.மு.வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் : பத்மம் பதிப்பகம்
பதிப்பாளர்: சதபூ.பத்மசீலன்
வகை : குழந்தை இலக்கியம்
ISBN: 978-955-0367-50-4
விலை : 180.00 பக்கங்கள் :
வெளியீடு எண் : இதழ்-71-73
ஆசிரியர் : தெ.மதுசூதனன்
ISSN : 20219041
விலை : 100.00 ரூபா
வெளியீடு : 2017 May - July
பதிப்பாசிரியர் : சதபூ.பத்மசீலன்

சீனாவும் இந்துசமுத்திரமும்

'சீனாவும் இந்துசமுத்திரமும்' என்ற இந் நூல் கடந்த மூன்று வருடங்களாக கலாநிதிப்பட்ட ஆய்வினை மேற்கொண்ட போது தேடப்பட்ட தகவல்களின் மேலதிக வாசிப்பினால் உருவானதாகும். இன்றைய உலக ஒழுங்கு பற்றிய தேடலில் மிகப்பிந்திய முடிவுகளை வெளியிடும் அமெரிக்கப் பல்கலைக்ககைமான ஹவாட்ன் சர்வதேச அரசியல் கற்கையின் பேராசிரியரான ஜோஸப்நை இன் கருத்துக்கள் கவனத்திற்குரியவை.
அவர் தொடர்ச்சியாக உலக ஒழுங்குபற்றிய ஆய்வில் ஈடுபட்டுவருவதனால் இன்றைய உலக ஒழுங்கின் போக்குகளை சரிவர முன்வைத்து வருபவராக உள்ளார். அவரது வாதமே அமெரிக்கா தலைமையிலான மேற்கு உலகம் முடிபுக்கு வந்து கொண்டிருப்பதாகவும் பலதுருவ ஒழுங்குக்குள் உலகம் நகர்வதாகவும் அதில் சீனாவின் பங்கு அதிகமானதெனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ - அரசியல் வலுவை சீனா சமப்படுத்தாது விடினும் பொருளாதாரத்தில் மிகப் பெரும் சக்தியாக எழுச்சியடைந்துள்ளது எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளரும் ஜனநாயகக்கட்சியின்  ஜனாதிபதி வேப்பாளராக விளங்கியவருமான கில்லாரி கிளின்டன் சீனா இராணுவ ரீதியில் அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் நாடாக வளர்ந்துள்ளதுடன் அமெரிக்காவை வேவுபார்க்கும் நாடாக உள்ளதென குறிப்பிடுகின்றார். உலகை அமெரிக்கா வேவுபார்க்க அமெரிக்காவை சீனா வேவுபார்க்கின்றது என்றால் அதன் வலியை வளர்த்துள்ளது என்பதையே காட்டுகின்றது. இருந்த போதும் சீனாவை வெற்றி கொள்ள அல்லது எழுச்சியை தடுக்க அமெரிக்க உலகளாவிய கூட்டுக்களைப் பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஜப்பான், ஐரோப்பிய யூன


ஏ.றமீஸ்
A.Rameez

சாதாரண குடும்பத்தில் பிறந்த கலாநிதி றமீஸ் அபூபக்கர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் விசேடதுறையில் 2004ல் முதல் நிலையில் சித்தியடைந்த்தன் விளைவாக அதே பல்கலைக்கழகத்தில் நிரந்தர விரிவுரையாளாக நியமிக்கப்பட்டார். பின்னர் தனது முதுமானி பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்ற இவர், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்புலமைப்பரிசிலைப் பெற்று தனது கலாநிதிப்பட்டத்தை பூர்த்தி செய்தார். அது மட்டுமன்றி முரண்பாட்டும் தீர்வையும் சமாதான ஆயத்தங்களும் கற்றைநெறியை பிரித்தானியாவில் பிரட்பேட் பல்கலைக்கழகத்திலும் பூர்த்தி செய்திருக்கின்றார். சமூக விவகாரங்களிலும் ஆய்வுப்பணியிலும் அதிகம் அக்கறை காட்டும் இவர் சிறந்த அரசியல் ஆய்வாளரும் ஆவார்.